அறக்கட்டளை செயல்பாடுகள்
சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்
“சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்” என்பதற்கேற்ப நமது உடல் நோயற்று இருப்பதே பெரிய வரமாகும். அதற்கேற்ப இன்றைய காலகட்டத்தில் ஆங்கில வழி மருந்துகள் உட்கொள்வதால் நோய் சரியாகும். ஆனால் மீண்டும் அதே நோய் திரும்ப வரும். மேலும் பக்க விளைவுகள் வந்து பக்கத்தில் பல வியாதிகளையும் அழைத்து வந்து விடுகிறது. ஆனால் பண்டைய கால சித்த மருத்துவத்தில் நம் உடம்பில் உள்ள ஒரு நோய்க்கு நாம் மருந்து உட்கொண்டால் நமது உடலில் நமக்கு தெரியாமல் இருக்கும் பல பிரச்சினைகளை அது சரிசெய்து விடுகிறது. மீண்டும் அந்த நோய் வாழ் நாள் முழுவதும் திரும்ப வராது. எனவே சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை எடுத்துக்கூறும் வகையில் நமது கிராமத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நமது முன்னோர்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறையை திரும்ப நினைவுபடுத்தும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.

நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைக் உருண்டை வழங்குதல் :
1000க்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவசமாக அறக்கட்டளை சார்பில் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைக் குளிகை வழங்கப்பட்டது. இதன் மூலம் காய்ச்சல், சளி, இருமல் வருவது தடுக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதனால் பல வியாதிகளை நாம் வரும் முன் காக்கலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். உடல் பலமாகும்.
இலவச சித்த மருந்து வழங்குதல்
முதியோர்களுக்கு கை, கால், மூட்டுவலி எண்ணெய் வழங்குதல், சளி, இருமல் மருந்து, நோய் எதிர்ப்புசக்தி மருந்து, உடல்நலத்தை பாதுகாக்கும் உணவு, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பல கிராமங்களில் 2000க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.

முதியோர் இல்லங்களுக்கு இலவச உணவு வழங்குதல்
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை முதியோர் இல்லங்களுக்கு சென்று இலவச உணவு அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் நாம் மனம் விட்டு பேசி அவர்களது மன அழுத்தத்தை குறைக்கும் போது அவர்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. முதியோர்களுக்கு இலவச மூட்டுவலி தைலம் மற்ற சத்துமாவு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
யோகா பற்றிய விழிப்புணர்வு
சாமுவேந்தர் அறக்கட்டளை சார்பில் யோகா குறித்த விழிப்புணர்வு முகாமில், யோகா செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும், மன அமைதி ஏற்படுவது, இறைத்தன்மையை உணர்வது , உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. முகாமில் பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாமில் பிளாஸ்டிக் ஒழிப்பு, நீர்நிலைகளை சுத்தமாக வைத்தல் மற்றும் பாதுகாத்தல், அதிக நீர் நிலைகளை ஏற்படுத்தி நீரை சேமிக்கும் திட்டங்களை எடுத்துரைத்தல், காற்று மாசுபாட்டை குறைத்தல், குப்பைகளை அப்புறப்படுத்தி கழிவு மேலாண்மை செய்தல், மரம் வளர்ப்பு, கண்மாய்களில் மரம் வளர்ப்பதால் மண் அரிப்பைத் தடுத்தல் உள்ளிட்ட அனைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஏற்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த கண்மாய் தூர்வாருதல்
கண்மாய், குளம் போன்ற பகுதியில் மண்சரிவு ஏற்படாமல் இருக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கத்தோடு 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் ஆட்களை பயன்படுத்தி தூர்வாரும் பணியும், மரக்கன்றுகளை நடுவதன் மூலம் மண்அரிப்பைத் தடுக்கவும் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் கண்மாய் அருகே மூலிகை செடிகளை பயிரிட்டு வளர்க்க, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் அறக்கட்டளை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆரோக்கிய உணவுகள் வழங்குதல் - சிறுதானியம் பற்றிய விழிப்புணர்வு
உணவே மருந்து என நமது முன்னோர்களின் பழக்க வழக்கங்களை மீட்டெடுப்பதில் அறக்கட்டளை முக்கிய பங்காற்றுகிறது. ஆரோக்கியமான உணவுகளை உண்பதால் உடல் நலம் சீராக்கப்பட்டு, நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களை வரவிடாமல் தடுப்பதே அறக்கட்டளையின் முக்கிய நோக்கமாகும். அதில் பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்கள் முக்கிய பங்காற்றுகிறது. நமது முன்னோர்கள் சிறுதானியங்களான கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட உணவுகளை உட்கொண்டதால் உடல் வலுவுடன் நீண்ட வருடங்களுக்கு நோயில்லாமல் வாழ்ந்து வந்தனர். எனவே அதை மக்களிடம் சென்று சேர்க்கும் நோக்கத்தோடு ஆரோக்கியமான உணவுகளை பற்றிய விழிப்புணர்வு நடத்தி, ஒவ்வொரு மாதமும் இலவச சிறுதானியம் மற்றும் அது தொடர்பான சத்துணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. எங்களது முகநூல் பக்கத்தில் இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்ந்து போடப்பட்டு வருகிறது.
பெண்களுக்கான உடல்நல விழிப்புணர்வு முகாம்
பெண்களுக்கான உடல்நல விழிப்புணர்வு முகாமில் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு, மாதவிடாய் காலங்களில் எப்படி சுத்தத்தை கடைபிடிப்பது, ஊட்டச்சத்து நிரம்பிய சரிவிகித உணவை உண்டு ஆரோக்கியமாக இருப்பது, இரத்தசோகை பிரச்சினைகளை தடுக்கும் இரும்புச்சத்து உள்ள உணவை சாப்பிடுவது, தண்ணீர் தேவையான அளவு குடிப்பது உள்ளிட்ட விஷயங்களை உள்ளடக்கிய முகாம் நடத்தப்படுகின்றது. கீரை, பயறுவகைகள், பால், பழங்கள் மற்றும காய்கறிகள் சாப்பிடுவதன் நோக்கத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


ஆன்லைன் விழிப்புணர்வு பிரச்சாரம்
தினமும் சமூக ஊடகங்களில் உடல்நலம், பெண்நலம், உணவு பழக்கவழக்கங்கள், ஆரோக்கிய வாழ்வியல் நடைமுறை பற்றி துண்டு பிரசுரங்கள் போல் போஸ்டர் பதிவு செய்யப்பட்டு, அனைவருக்கும் பகிரப்பட்டு அறக்கட்டளை சார்பில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடர்வதால் உடல்நலம் சார்ந்த பல கருத்துக்களை தெரிந்து கொள்ளலாம்.
கோவிட்-19 தடுப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்
கோவிட்-19 பெருந்தொற்றின் விரைவான பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று வலியுறுத்தப்படுகிறது. கோவிட் கட்டுப்பாட்டில் கிராமப்புற மக்களின் முக்கிய நிலையை உணர்ந்து, நோய் பற்றிய கிராமப்புற மக்களின் அறிவு, அணுகுமுறை மற்றும் நடைமுறைகளை உணர்ந்து இந்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அறிகுறிகள் தோன்றிய முதல் மூன்று நாட்களில் தொற்றுப் பரவல் வீரியமாக இருக்கும், எனினும் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பும், அறிகுறிகளைக் காட்டாத மக்களிடமிருந்தும் தொற்று பரவுவது சாத்தியமுள்ளது. பொதுவான அறிகுறிகளில் காய்ச்சல், இருமல், சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் வாசனை உணர்வு இழப்பு ஆகியவை அடங்கும். நோய் தீவிரமடையும்போது நிமோனியா மற்றும் கடுமையான மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படும். கால இடைவெளியானது முதல் ஐந்து நாட்கள் வரை இருக்கும்; சிலநேரங்களில் இரண்டு முதல் பதினான்கு நாட்கள் வரை கூட இருக்கலாம். இத்தொற்றுநோய்க்கு அறியப்பட்ட தடுப்பூசி அல்லது குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு சிகிச்சை எதுவும் இல்லை. அறிகுறி குறைப்பு சிகிச்சை மற்றும் ஆதரவு சிகிச்சை ஆகியவையே முதன்மை சிகிச்சைகளாக உள்ளன. பரிந்துரைக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளில் கை கழுவுதல், இருமும்போது ஒருவர் தம் வாயை மூடுவது, மற்றவர்களிடமிருந்து தூரத்தை பராமரித்தல், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் நபர்களைக் கண்காணித்தல் மற்றும் சுய தனிமைப்படுத்துதல் ஆகியவை அடங்கும். மேற்கண்ட தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி விரிவாக செயல்விளக்கத்தோடு மக்களுக்குத் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்
திறன் மேம்பாட்டுப் பயிற்சி விழிப்புணர்வானது தனிநபர்கள் தங்கள் தொழில் இலக்குகளை அடையத் தங்கள் திறன்களையும் அறிவையும் மேம்படுத்திக் கொள்ள பெரிதும் உதவுகிறது. திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை எடுத்துக்கொள்வதன் மூலம் தனிநபர்கள் தங்களுக்குரிய தனித்திறமையை கண்டறிந்து அதன் மூலம் புதிய தொழிலை உருவாக்கி சமூகத்தில் நன்மதிப்பை பெற உதவுகிறது. புதிய திறன்களைப் பெறலாம் மற்றும் அவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தலாம். பலதரப்பட்ட தொழில்களுக்கான வழிமுறைகள், திட்டத்தயாரிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. முகாமானது இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருப்பது ஆச்சரியமில்லை. குறிப்பாக பெண்கள் தங்கள் பொருளாதார தேவைகளுக்கு தங்களுடைய சொந்த முயற்சியில் பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் வேலை வாய்ப்புகள் முக்கிய பங்கை வகிக்கின்றன, தயக்கம், முயற்சியின்மை, தொடர்புமொழி, பயிற்சி குறைபாடுகள், அறிவிப்புகள் தெரியாமல் போன்ற பல்வேறு காரணிகள் நம் மக்கள் அந்தப் பணிக்கு செல்லாமல் இருப்பதற்கு காரணங்களாக இருப்பதால், அவை அனைத்தையும் நோக்கோடு சிறப்பான முறையில் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. பல்வேறு போட்டித் தேர்வுகள் மூலம் தரமான வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் இளைஞர்கள், படிக்கும் வழிமுறைகள், சிறப்பாக அதை வெளிக்கொண்டு வெற்றிபெற வைக்கும் வகையில் விழிப்புணர்வு நடத்தப்படுகிறது.
விளையாட்டு பற்றிய விழிப்புணர்வு முகாம்
விளையாட்டு என்பது மனித வாழ்வின் ஒரு அங்கமாகும், மேலும் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. மேலும், விளையாட்டு ஒரு நபரின் தன்மை மற்றும் ஆளுமையை உருவாக்க உதவுகிறது. உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க இது ஒரு சிறந்த கருவியாகும். விளையாட்டு மனம் மற்றும் உடல் இரண்டிலும் நேர்மறையான விளைவைக் கொண்டுள்ளது. ஒரு நபர் விளையாட்டின் காரணமாக ஒரு நல்ல சுவாசத்தை அதிகரிப்பதால் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு – விளையாட்டு பல நோய்களைத் தடுக்கிறது. விளையாட்டு நிச்சயமாக தன்னம்பிக்கையை வளர்க்க ஒரு சிறந்த கருவியாகும். விளையாட்டு ஒரு தனிநபரின் சமூக வாழ்க்கையை வளப்படுத்துகிறது. விளையாட்டு வாழ்க்கையில் ஒழுக்கம் மற்றும் பொறுமையின் மதிப்புகளை கற்பிக்கிறது. தோல்வியை எவ்வாறு கையாள்வது என்பது விளையாட்டு மக்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. விளையாட்டு தனிநபர்களின் சிந்திக்கும் திறனை மேம்படுத்துகிறது.விளையாட்டு நிச்சயமாக மனதை கூர்மையாக்கும், விளையாட்டு மன அழுத்தத்தைக் குறைக்கிறது. விளையாட்டு விளையாடுபவர்களின் மன அமைதியை உறுதி செய்கிறது. மிகவும் குறிப்பிடத்தக்கது, விளையாட்டு தனிநபர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் தருகிறது. இவ்வளவு விஷயங்களையும் பற்றி விரிவாக விளையாட்டின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு நடத்தப்படுகிறது.