நிகழ்வுகள்
உலக சுற்றுச்சூழல் தினம்
இயற்கையைப் பாதுகாப்பதற்கும் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும் மரம் நடுவதன் மூலம், மழை பெறுவோம் என்று மரங்களின் முக்கிய பங்கையும், சுற்றுச்சூழல் தினத்தில் விழிப்புணர்வு பிளாஸ்டிக் ஒழிப்பு, நீர்நிலைகளை சுத்தமாக வைத்தல் மற்றும் பாதுகாத்தல், அதிக நீர் நிலைகளை ஏற்படுத்தி நீரை சேமிக்கும் திட்டங்களை எடுத்துரைத்தல், காற்று மாசுபாட்டை குறைத்தல், குப்பைகளை அப்புறப்படுத்தி கழிவு மேலாண்மை செய்தல், மரம் வளர்ப்பு, கண்மாய்களில் மரம் வளர்ப்பதால் மண் அரிப்பை தடுத்தல் உள்ளிட்ட அனைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த நாள் நமது சுற்றுச்சூழலை வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு கூட்டு அர்ப்பணிப்பாக செயல்படுகிறது, தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு தூய்மையான சுற்றுச்சூழல் கிடைக்கவழி செய்கிறது.


உலக ஊட்டச்சத்து தினம்
உலக ஊட்டச்சத்து தினத்தன்று சாமுவேந்தர் அறக்கட்டளை சார்பில் ஊட்டச்சத்து நிரம்பிய சரிவிகித உணவை உண்டு ஆரோக்கியமாக இருப்பது, இரத்தசோகை பிரச்சினைகளை தடுக்கும் இரும்புச்சத்து உள்ள உணவை சாப்பிடுவது, தண்ணீர் தேவையான அளவு குடிப்பது உள்ளிட்ட விஷயங்களை உள்ளடக்கிய முகாம் நடத்தப்படுகின்றது. கீரை, பயறுவகைகள், பால், பழங்கள் மற்றும காய்கறிகள் சாப்பிடுவதன் நோக்கத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ஆசிரியர் தினம்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். அதில் கற்பித்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து மாணவர்களின் வழிகாட்டியாக திகழ்கிற ஆசியர்களின் பெருமையை உணர்த்தும் நாளாக இது அமைகிறது. அறக்கட்டளை சார்பில் இதை ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூர்ந்து ஆன்லைன் பிரச்சாரமும், மாணவர்களுக்கு இனிப்பும் வழங்கி புதிய உறுதிமொழியுடன் புதிய பாதையும் வழிவகுக்க உதவுகிறது.


சர்வதேச பெண்கள் தினம்
ஒவ்வோரு ஆண்டும் மார்ச் 8 ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு, மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு, மாதவிடாய் காலங்களில் எப்படி சுத்தத்தை கடைபிடிப்பது, ஊட்டச்சத்து நிரம்பிய சரிவிகித உணவை உண்டு ஆரோக்கியமாக இருப்பது, இரத்தசோகை பிரச்சினைகளை தடுக்கும் இரும்புச்சத்து உள்ள உணவை சாப்பிடுவது, தண்ணீர் தேவையான அளவு குடிப்பது உள்ளிட்ட விஷயங்களை உள்ளடக்கிய முகாம் நடத்தப்படுகின்றது. கீரை, பயறுவகைகள், பால், பழங்கள் மற்றும காய்கறிகள் சாப்பிடுவதன் நோக்கத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் பெண்கள் சுயதொழில் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
சர்வதேச மாதவிடாய் சுகாதார தினம்
ஒவ்வோரு ஆண்டும் மே 28 ம் தேதி சர்வதேச மாதவிடாய் சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு, மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு, மாதவிடாய் காலங்களில் எப்படி சுத்தத்தை கடைபிடிப்பது, சிறுமிகள், மாணவிகளுக்கு சிறப்பு சுகாதார வழிகாட்டுதலுடன் நாப்கீன் எப்படி உபயோகிப்பது, மனபயத்தை போக்குவதற்கான சிறப்பு ஆலோசனைகள், ஆன்லைன் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
