வரவேற்கிறோம்
சாமுவேந்தர் அறக்கட்டளை
சாமுவேந்தர் அறக்கட்டளையானது 2019 ல் பதிவுசெய்யப்பட்ட ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனமாகும். சிறு மாற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நோக்கத்துடன், கல்வி, சுகாதாரம், வாழ்வாதார ஆதரவு மற்றும் சமூக மேம்பாட்டில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துதல், பாரம்பரிய பழக்க வழக்கங்களை அன்றாட வாழ்வியலாக்குதல் போன்ற மாற்றத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இலவச விழிப்புணர்வு முகாம்களை வழங்குதல், பொருளாதார சுதந்திரத்தின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், இளைஞர்களின் வளர்ச்சிக்கான தொழில்முனைவை மேம்படுத்துதல் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது
கணக்கு விவரங்கள்
வங்கி பெயர் | இந்தியன் ஓவர்சீஸ் வங்கி |
கிளை பெயர் | சிலுக்குவார்பட்டி |
கணக்கு பெயர் | SAMUVENDAR CHARITABLE TRUST |
கணக்கு எண் | 140101000016410 |
IFSC குறியீடு | IOBA0001401 |
MICR குறியீடு | 625020049 |
சாமுவேந்தர் அறக்கட்டளை
அன்பினால் மட்டுமே அனைத்தையும் வெல்ல முடியும்

பணி
ஆரோக்கியமான வாழ்வியல் முறைகள் மூலம் பாரம்பரியத்தை நிலைநிறுத்துதல், சுற்றுச்சூழல் மேம்பாடு, தனிமனித முன்னேற்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்தை மேம்படுத்துதல் .

பார்வை
“அன்பினால் மட்டுமே அனைத்தையும் வெல்ல முடியும்” என்ற மந்திரத்தை அடிப்படையாக வைத்து “கொடுப்பதிலே தான் அந்த அன்பு இருக்கிறது” என்பதற்கேற்ப, சமூக முன்னேற்றத்தையும், அனைவரிடமும் மகிழ்ச்சியை உருவாக்கும் முயற்சி

குறிக்கோள்
அன்றாட வாழ்வில் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைபிடித்து, நோய்களை அறவே தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
பயனாளிகள்
நிகழ்வுகள்
ஆன்லைன் விழிப்புணர்வு பிரச்சாரம்

அறக்கட்டளை செயல்பாடுகள்
சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்
“சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்” என்பதற்கேற்ப நமது உடல் நோயற்று இருப்பதே பெரிய வரமாகும். அதற்கேற்ப இன்றைய காலகட்டத்தில் ஆங்கில வழி மருந்துகள் உட்கொள்வதால் நோய் சரியாகும். ஆனால் மீண்டும் அதே நோய் திரும்ப வரும். மேலும் பக்க விளைவுகள் வந்து பக்கத்தில் பல வியாதிகளையும் அழைத்து வந்து விடுகிறது. ஆனால் பண்டைய கால சித்த மருத்துவத்தில் நம் உடம்பில் உள்ள ஒரு நோய்க்கு நாம் மருந்து உட்கொண்டால் நமது உடலில் நமக்கு தெரியாமல் இருக்கும் பல பிரச்சினைகளை அது சரிசெய்து விடுகிறது. மீண்டும் அந்த நோய் வாழ் நாள் முழுவதும் திரும்ப வராது. எனவே சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை எடுத்துக்கூறும் வகையில் நமது கிராமத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நமது முன்னோர்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறையை திரும்ப நினைவுபடுத்தும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.
நிகழ்வுகள்

சர்வதேச பெண்கள் தினம்
ஒவ்வோரு ஆண்டும் மார்ச் 8 ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு, மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு, மாதவிடாய் காலங்களில் எப்படி சுத்தத்தை கடைபிடிப்பது, ஊட்டச்சத்து நிரம்பிய சரிவிகித உணவை உண்டு ஆரோக்கியமாக இருப்பது, இரத்தசோகை பிரச்சினைகளை தடுக்கும் இரும்புச்சத்து உள்ள உணவை சாப்பிடுவது, தண்ணீர் தேவையான அளவு குடிப்பது உள்ளிட்ட விஷயங்களை உள்ளடக்கிய முகாம் நடத்தப்படுகின்றது. கீரை, பயறுவகைகள், பால், பழங்கள் மற்றும காய்கறிகள் சாப்பிடுவதன் நோக்கத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் பெண்கள் சுயதொழில் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

உலக ஊட்டச்சத்து தினம்
உலக ஊட்டச்சத்து தினத்தன்று சாமுவேந்தர் அறக்கட்டளை சார்பில் ஊட்டச்சத்து நிரம்பிய சரிவிகித உணவை உண்டு ஆரோக்கியமாக இருப்பது, இரத்தசோகை பிரச்சினைகளை தடுக்கும் இரும்புச்சத்து உள்ள உணவை சாப்பிடுவது, தண்ணீர் தேவையான அளவு குடிப்பது உள்ளிட்ட விஷயங்களை உள்ளடக்கிய முகாம் நடத்தப்படுகின்றது. கீரை, பயறுவகைகள், பால், பழங்கள் மற்றும காய்கறிகள் சாப்பிடுவதன் நோக்கத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஆசிரியர் தினம்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். அதில் கற்பித்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து மாணவர்களின் வழிகாட்டியாக திகழ்கிற ஆசியர்களின் பெருமையை உணர்த்தும் நாளாக இது அமைகிறது. அறக்கட்டளை சார்பில் இதை ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூர்ந்து ஆன்லைன் பிரச்சாரமும், மாணவர்களுக்கு இனிப்பும் வழங்கி புதிய உறுதிமொழியுடன் புதிய பாதையும் வழிவகுக்க உதவுகிறது.